(சுமன்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் மட்டக்களப்பு கிளையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புளொட் அமைப்பின் கனடா கிளையினரும், பிரித்தானிய கிளை உறுப்பினரான முகுந்தன் அவர்களினாலும் வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையிலும், கட்சியின் சமுக மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன் அவர்களின் ஏற்பாட்டிலும் சுமார் 230க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்நிவாரணம் வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சீ.சங்கரப்பிள்ளை, மாவடிவேம்பு கிராம சேவை உத்தியோகஸ்தர் இர்பான் கிராம அவிபிரித்தி சங்க தலைவர் க.விஜயராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours