(அஸ்ஹர் இப்றாஹிம்)
பண்டாரவளை - பதுளை பிரதான வீதியில் உடுஹுல்பொத்த எனும் இடத்தில் திடீரென்று மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இச் சம்பவத்தின் போது இரு வாகனங்கள் முழுமையாக மண்ணில் புதையுண்டும், இரு வாகனங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் எந்தவித உயிர்ச் சேதமும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours