கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சர் உட்பட மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours