(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
இலங்கையின்
10வது தேசிய சாரணர் ஜம்போரி "மாற்றத்திற்கான தலைமைத்துவம்" எனும்
தொனிப்பொருளில் திருகோணமலையில் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்
மட்டக்களப்பில் இருந்து 520 சாரணங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்வானது, இன்று 20.02.2024 திகதி தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச சாரணர் தலைவர்கள் இன்று தொடக்கம் திருகோணமலைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
திருகோணமலை
ஸ்ரீ கோணேஸ்வரா கல்லூரி மைதானத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த
ஜம்போரிக்கு அதன் அருகே காணப்படும் மைதானங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாளை 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜம்போரியின் அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது.
இதன்போது,
21ஆம் திகதி தொடக்கம் காலை முதல் இரவு 9.00 மணிவரை பொது மக்கள் ஜம்போரியை
பார்வையிட முடியும். ஜம்போரி நடைபெறுவதனை முன்னிட்டு பாதுகாப்பு
ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மைதானத்தில் கூடாரங்களை
அமைத்து சாரணர் தலைவர்கள் பல்வேறு பிரயோக செயற்பாடுகளை மேற்கொள்வதுடன்
தலைமைத்துவம் ,புத்தாக்கம் உட்பட பல துறைகளில் தம் திறமைகளை வெளிக்கொணர
சந்தர்ப்பமும் வழங்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours