இ.சுதாகரன்
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட்/ பட் /திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு வித்தியாலயத்தின் முதல்வர் திரு சி.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை(22) முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப் பிரிவுப் பொறுப்பான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சோ.பத்மராஜா, பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் முதல்வர் வே.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் அதிபர் கி.கிருஸ்ணராஜா ,பிரதி அதிபர் திருமதி தேவிகா, முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் மற்றும் புதிய மாணவர்கள் வேன்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours