(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு புதிதாக 14 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்புதிய வைத்தியர்களுக்கான அறிமுக நிகழ்வும் புதிய சேவை நிலையங்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிருவாகப்பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours