(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
கோறளைப்பற்று
வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் பால் மா வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந்
நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்
கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பால்மா பொதிகள் வழங்கிவைத்துள்ளார்.
இதன் போது பொண்டேரா நிறுவனத்தின் அனுசரனையில் 540 அங்கர் பால்மா பொதிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்ட்டது.
போசாக்கு
அடைவு மட்டத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பாலுட்டும்
தாய்மார்களுக்கான 400 கிராம் நிறையுடைய அங்கர் பால்மா பொதிகள்
வழங்கிவைக்கும் திட்டத்தின் கீழ் 270 நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours