பாறுக் ஷிஹான்


மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் ஏற்பாடு செய்துள்ள போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பெருளில் பொத்துவில் தொடக்கம் பாசிக்குடா வரைக்குமான "P2P CYCLING CHALLENGE" விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம் (10.02.2024) பொத்துவில் அறுகம்பையில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு  வியாழக்கிழமை(8) இரவு நடைபெற்றது.

இதன் போது  P2P CYCLING CHALLENGE  சார்பான   consultant சர்வதேச தொண்டு நிறுவன  தலைவர் கலீல் கபூர் ,  பிரதித் தலைவர் வைத்தியர் ஏ.ஆர்.எம். அஸ்மி, வைத்தியர் ஏ.எஸ். பௌசாட்  , நெல்லியடி காப்புறுதி நிறுவன பிராந்திய முகாமையாளர் துரை கோபிநாத்    அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ  மலீக்  , பிரதி செயலாளரும் சிரேஷ்ட பொது சுதாதார பொறுப்பதிகாரியுமான  எம்.என்.எம்.பைலான்,ஆசிரியர்  பரமேஸ்வரன்  ஆகியோரும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours