அந்நியர்களிடம்
இருந்து சுதந்திரத்தை பெறவும், 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு
வரவும் முஸ்லிம்கள் நாட்டுக்கு மேற்கொண்ட தியாகங்கள் மறக்கப்பட கூடாது
என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்
ஐ. ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
இவர் நேற்று சனிக்கிழமை இது தொடர்பாக கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தவை வருமாறு
ஆங்கிலேயர்களிடம்
இருந்து நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்று கொடுப்பதற்கு தேச
பக்தர்களான முஸ்லிம்கள் மிக காத்திரமான பங்களிப்புகளை வழங்கி உள்ளனர்.
மூவினங்களும் சேர்ந்து போராடித்தான் தாய்நாட்டுக்கு சுதந்திரம்
பெறப்பட்டது.
அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால்
துரோகிகள் என்று இவர்கள் முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் எமது நாடும்,
மக்களும் இவர்களை சுதந்திர போராட்ட வீரர்களாக கொண்டாட வேண்டியது தலையாய
கடப்பாடு, நன்றி கடனும் ஆகும்.
ஊவா வெல்லஸ்ஸ
கிளர்ச்சியில் பங்கேற்ற சிங்கள புத்திரர்களை மாத்திரம்தான் மைத்திரிபால
சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது சுதந்திர போராட்ட வீரர்களாக வர்த்தமானியில்
பிரகடனம் செய்து கபட நாடகம் நடத்தினார்.
நல்லாட்சி
அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் இதற்கெதிராக வாய்
திறக்கவே இல்லை. அவர்கள் கண் இருந்தும் குருடர்களாக, வாய் இருந்தும்
ஊமைகளாக, காதிருந்தும் செவிடர்களாக நடந்து கொண்டிருந்தனர்.
30
வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் முஸ்லிம்கள் ஏராளமான
தியாகங்களை மேற்கொண்டனர். அவையும் மறக்கடிக்கப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டு
கொண்டிருக்கின்றன. சஹ்ரான் கும்பலால் மாறாத களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Post A Comment:
0 comments so far,add yours