(எஸ்.அஷ்ரப்கான்)

அண்மையில் கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய  கோரி பெருந்தொகையான கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் மாபெரும் கண்டன பேரணி இன்று (14)  இடம்பெற்றது. 

இன்றைய தினம் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிப்பு குழுக் கூட்டம் அம்பாறை கச்சேரியில் நடைபெறுகின்ற நிலையில்,

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர எச்.எம்.எம் ஹரீஸிடம் ஆசிரியர்கள் இன்று நேரடியாக சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து வைத்தனர். அதனைக் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours