இ.சுதாகரன்



நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் சங்கர் புரம் வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்வியே எமது சமூகத்தின் காப்பரன் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினால் பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்.  போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் விக்னேஸ்வரா வித்யாலயத்தில்   பொருளாதார நலிவு நிலையில் கல்வி கற்று வரும் தெரிவு செய்யப்பட்ட நூற்று பத்தொன்பது (119) மாணவச் செல்வங்களுக்கு கரிகாலன் அமைப்பின் நிதி அனுசரனையில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தியத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. 

நிகழ்வில் நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளர் கோபாலன் பிரசாத், ஊடகச் செயலாளர் கருணைறாஜன், இணைப்பாளர் சுரேன், மகளிர் அணி செயலாளர் கண்மணி உட்பட பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours