( வி.ரி.சகாதேவராஜா)

போதிய வருமானமின்றி மூன்று பெண் பிள்ளைகளுடன் நிர்க்கதியான பெண்ணுக்கு  
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வாழ்வாதார உதவியை வழங்கி வைத்தது.

 கணவனின் வருமானம் இன்றி மூன்று பெண் பிள்ளைகளை  வளர்த்து படிப்பிற்பதற்காக பாரியளவில் தோட்டம் செய்வதையும் அதற்கு கிணற்றில் இருந்து கைகளால் நீர் இறைப்பதையும் அவதானித்த அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி கலைவாணி தயாபரன் அவதானித்து இவ் உதவியை மேற்கொண்டார்

 தோட்டத்தினை மேலும் அபிருத்தி செய்து வருமானத்தை ஈட்டுவதற்காக 28000.00 பெறுமதியான நீர் பம்பி வழங்கி வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு பெண்ணுக்கு இவ் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் அதனை பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி கலைவாணி தயாபரன் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கி வைத்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours