நூருல் ஹுதா உமர்
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் எம்.எம். முஸ்தபா (மயோன் முஸ்தபா) அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் புதல்வரும் றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாட்டு மற்றும் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகருமான றிஸ்லி முஸ்தபா அவர்களின் அனுசரணையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தில் மர்ஹூம் மயோன் முஸ்தபா Multimedia Research and Development Unit இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் Rizley Musthafa Education Aid and Social Organization அமைப்பின் ஸ்தாபகர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தேசிய கொடி பிரதம அதிதியால் ஏற்றி வைக்கப்பட்டு Multimedia Research and Development Unit இன் திறப்பு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ரவூப் அவர்கள் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ், உதவி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours