சம்மாந்துறை
வீரமுனை அலவாக்கரை வீதியில் உள்ள இரண்டு தாம்போதிகளின் நிர்மாணம் குறித்து
ஆராய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
எம். கோபாலரத்தினம் நேரடி விஜயமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.
இதன் போது குறித்த இரண்டு தாம்போதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய வேளையில் பூர்த்தி செய்ய படாதமை குறித்து ஆராய்ந்தார்.
இதனை பார்வையிட்டு குறித்த ஒப்பந்தக்காரர் இதை ஒருவார காலத்தில் முடிவுறுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக அவர் கல்முனை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்திற்கு கன்னி
விஜயத்தை மேற்கொண்டார்.கல்முனை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி எம் எம் .முனாஸ் செயலாளரை மாலைசூட்டி வரவேற்றார்.
அலுவலகத்தில் பணிகள் பற்றி ஆராயப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours