நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பூங்கா மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

திருமதி சுசித்ரா எல்ல கோவிட் காலப்பகுதியில் கொவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான திருமதி சுசித்ரா எல்ல அவர்கள் ஆளுநரால் கௌரவிக்கபட்டார்.

மேலும் மட்டக்களப்பு கல்வி துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கலாசார நிகழ்வுகள்,சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அமைச்சர் வியாழேந்திரன் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்  வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செய்யட்  அலி சாஹிர் மௌலானா, கிழக்கு  மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours