எஸ்.சபேசன்
சம்மாந்துறை வலயத்திலுள்ள 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சர்வேஸ்வரன் குகதர்சனா அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பத்தாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வலயம் சார்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத் எ.எல்.எம்.மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன்; ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் இவர் ஆசிரியர் ஆ.சர்வேஸ்வரன் அவர்களின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours