மாளிகைக்காடு செய்தியாளர்
கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக 15 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற "லெஜெண்ட்ஸ் சம்பியன்ஸ் கிண்ணம்-2024" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தையும், 50 ஆயிரம் பண பரிசையும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது.
கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக நிர்வாகியும், கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.அஷீம் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எம். ஜமால்தீன் தலைமையில் இரு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றி இறுதியாட்டத்திற்கு அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டுக்கழகமும், அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகமும் தெரிவானது. இதில் இரண்டாம் இடத்தை தனதாக்கிய அக்கரைப்பற்று டீன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினருக்கு 25 ஆயிரம் பணப்பரிசும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளரும், கிழக்கின் கேடயம் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம். றியாத், பிர்லியண்ட் விளையாட்டுக் கழக தலைவர் எம்.எஸ்.எம்.பழீல், கல்முனை லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக உப தலைவர் எம்.ஏ. கரீம், அனுசரணையாளர்கள், கழக வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours