(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களினால் தொடுக்கப்பட வழக்கு முடிவு நேற்று (29) வழங்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து செயற்பட முடியுமென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்த்தன, சிரான் குனரெட்ன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours