!
கிழக்குப்
பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட விரிவுரையாளர் டாக்டர் கந்தசாமி
அருளானந்தம் குடும்ப நலத்துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தம்பிலுவில்
கந்தசாமி விசாலாட்சி தம்பதியினரின் புதல்வராவரான வைத்திய கலாநிதி டாக்டர்
அருளானந்தம் ஆரம்பக் கல்வியை தம்பிலுவில் சரஸ்வதி வித்யாலயத்திலும் பின்னர்
தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை அக்கரைப்பற்று
முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.
1984 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இணைந்தார்.
வைத்திய
கலாநிதியாகி அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலை கொழும்பு தேசிய வைத்தியசாலை
மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை திருக்கோவில் ஆதரவைத்திய சாலை போன்ற
பணியிடங்களில் கடமையாற்றி இரண்டாயிரத்தி ஒன்பதில் கிழக்கு பல்கலைக்கழக
சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் ஆரம்ப சுகாதார துறை விரிவுரையாளராக பதவி
ஏற்றார்.
கிழக்கு
பல்கலைக்கழகத்தின் முதலாவது குடும்ப நல துறை பேராசிரியராகவும் தம்பிலுல்
கிராமத்தில் முதலாவது மருத்துவ துறை பேராசிரியராகவும் திகழ்கிறார்.
கிழக்குப்
பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் உறுப்பினருமான இவர் மனிதாபிமானி
உலகத் தமிழ்மாமணி வைத்தியாஜோதி போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.
இலங்கையில் குடும்ப நல துறையில் தமிழ் பேசும் சமூகத்தில் முதலாவது பேராசிரியராவார்.
இவர் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணியாளர் டாக்டர் கே.முருகானந்தத்தின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours