( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை
இந்திய நட்புறவு ஒன்றியத்தினால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில்
நடாத்தப்பட்ட இசைத்தேர்வில் கிழக்குப்பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட
விரிவுரையாளர் காரைதீவைச் சேர்ந்த திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ் "ஸ்ரீ
விக்ரமகீர்த்தி" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) கண்டி கெப்பிடிப்பொல மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம
அதிதிகளாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.
ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர்
கலந்து சிறப்பித்தனர்.
கிழக்குப்பல்கலைக்கழக
இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ் , காரைதீவு
விபுலானந்தா மத்திய கல்லூரியின் உயர் தரபிரிவு விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்
பத்மநாதன் கேதீஸ்ஸின் துணைவியாராவார்.
இலங்கை முழுவதும் இருந்து சுமார் 140 பேர் பல்துறை விற்பனர்களாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours