( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கையில் உள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  புதிய பாடத் திட்டமொன்றை அறிமுகம் செய்திருக்கிறது.

அதன் ஓரங்கமாக திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினியின் ஏற்பாட்டில்  பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம்(17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி  வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார். 

இதில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர்.

இதன் போது, புதிய பாடத் திட்டத்திற்கான பாட நூல்களும், பஞ்சாங்கமும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

 கலந்து கொண்ட அனைவருக்கும் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரெத்தினத்தின் ஏற்பாட்டில் இலங்கை சிவதொண்டர் பேரவை முழுமையாக உணவு சிற்றுண்டிகளை வழங்கியது. இலங்கை சிவதொண்டர் பேரவை ஸ்தாபகர்  நவா இளங்கோ இதற்கான அனுசரணை வழங்கியிருந்தார்கள்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours