நூருல் ஹுதா உமர் 


காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார். 

காஸா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நிதி விரைவில் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட உள்ளது. 

வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த நிதியத்துக்கு உதவிகளை வழங்கிவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முதல் அரசியல் தலைமையாக இந்நிதியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours