(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை, மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அதிகமான நோயாளர்கள் குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக தினமும் வருவதுன்டு, வெளிநோயாளர் பிரிவில் போதுமான இடவசதிகள் இல்லாததன் காரணத்தினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பலரும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து ஆரம்ப சுகாதார சேவையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் (PSSP) சுமார் 2மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டது.
அந்த வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தினை மக்கள் பாவனைக்கு கையளித்து வைத்தியசாலையின் சுகாதார நடவடிக்கைகளையும் பார்வையிடும் பொருட்டு அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours