(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடாத்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் 2024.03.03 ஆம் திகதி பல்கலைக்கழக கலை கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சர்வதேசப் புகழ் ஒலிபரப்பாளர் வி.எச். அப்துல் ஹமீட் இன் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் நிகழ்த்த, தலைமையுரையை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நிகழ்த்தினார்.

சிறப்புரைகளை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், இந்திய சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, இந்திய புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூதின் தலைமை இமாம் ஹாபிழ் ஏ. பீர்முகம்மது பாகவி ஆகியோரும் ஆற்றினர்.

நிகழ்வில் ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கு நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வழங்கி அறிமுகம் செய்து வைத்தார். 

இங்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்துக்கும் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்திற்கு நூலகர் எம்.எம்.றிபாவுடீன் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

 இந்நூலின் முதற்பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி  பெற்றுக்கொண்டதுடன் அதிதிகளும் எம்.ஏ. முஸ்தபா அவர்களிடமிருந்து பிரதிகளை பெற்றுக்கொண்டனர். 

ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா அவர்கள் அதிதிகளுக்கு பொன்னாடைகள் போற்றியும் கௌரவித்தார்.

நிகழ்வில் நன்றியுரையை ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான றமீஸ் அப்துல்லாஹ்  நிகழ்த்தினார்.

பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப் ஆகியோர் நட்புநிமிர்த்தம் அதிதிகளுக்கு நூல்களையும் வழங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours