( வி.ரி.சகாதேவராஜா)

இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஈரளகுளம் வேலோடும் மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அன்னதான மண்டபம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

வேலோடுமலை முருகன் ஆலய தர்மகர்த்தா எஸ்.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற அன்னதான மண்டப திறப்பு விழாவில், இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.

லண்டனில் வாழும் திருமதி ஜீவா தேவி வரதராஜன் , காலஞ்சென்ற திரு மயில்வாகனன் வரதராஜன் AVS அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த அன்னதான மண்டபத்தை ராமகிருஷ்ண மிஷன்  வேண்டுகோளின்படி நிறுவியுள்ளனர்.

இந்த பணியில் ராமகிருஷ்ண மிஷன் தொண்டர் திரு கருணாநிதி  பொறுப்பேற்று  முருகன் ஆலயத்தின் தலைவர் திரு தியாகராஜாவின் ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

  அன்னதான மையத்தோடு இணைந்து சமய நூல்கள் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களையும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிகழ்வில்  ராமகிருஷ்ணன் மிஷன் பக்தர்கள் மற்றும் அன்பர்கள் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours