திருக்கோவில் பிரதேச பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவன் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து மாணவனின் உறவினர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் வைத்தியசாலை முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏற்பட்ட பெரும் பதற்றநிலை காரணமாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவத்திற்கு மேற்படி விடயம் கொண்டுவரப்பட்டதனையடுத்து திருக்கோவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்த பிராந்திய பணிப்பாளர் டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், மரணமடைந்த மாணவனின் குடும்பத்தினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.
மாணவனுடைய திடீர் மரணம் கவலையளிப்பதாகவும் அன்னாருடைய குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட பணிப்பாளர் மேற்படி விடயம் தொடர்பாக நீதியான விசாரணை ஒன்றினை மேற்கொள்வதாகவும் உறுதியளித்ததுடன் வைத்தியசாலைக்கும் விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours