தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களது சேவையினைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவரும் தமிழரசுக்கட்சியின் எருவில் கிளைத் தலைவருமான அ.வசிகரன் அவர்களின்  தலைமையில் எருவில் சிக்கனச் சேமிப்பு கடனுதவி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்குக் கண்ணகியம்பாள் ஆலய பரிபால சபை தலைவர் மா. சுந்தரலிங்கம் ஓய்வு பெற்ற அதிபர் சா.பரமானந்தம் மற்றும் கோயில் போரதீவு அதிபர் சா.பரமானந்தம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள் செயலாளர்கள் ஏனைய ஆலயங்களில் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours