( வி.ரி.சகாதேவராஜா)
 சம்மாந்துறை வலயத்தில் உள்ள சம்மாந்துறை கோட்டக் கல்வி காரியாலயம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர்
உமர் மௌலானாவின் வழிகாட்டலில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ. நசீர்  எடுத்த பெருமுயற்சியின் காரணமாக இக்கோட்ட கல்வி காரியாலயம் புதுப் பொலிவு பெற்று சிறப்பாக காட்சியளிக்கின்றது.

 அங்கு ஒன்று கூடல் மண்டபம் ஏனைய மண்டபங்கள் மற்றும் கல்விசார் தகவல்கள் மிசன் விஷன் நவீன முறையில் காட்சிப்படுத்த பட்டுள்ளன.

வலயக்கல்விப் பணிமனையின் புதன்கிழமை கல்வி அபிவிருத்தி கூட்டம் பரீட்சார்த்தமாக நடைபெற்றது.

 இது தவிர அந்த முழு கட்டிடமே வர்ணப் பூச்சுகளோடும் ஏனைய கல்வி செயற்பாடுகளுக்கு பொருத்தமான காட்சிகளோடும் நவீனம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

 கோட்டக் கல்வி பணிப்பாளர் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஏ.நசீர் தன் அபார முயற்சியில் கட்டிடம் புதுப் பொலிவு பெற்றதை பலரும் பாராட்டி பேசினார்கள்.
இதன் திறப்புவிழா விரைவில் நடைபெறும்.

 இவ்வாறு சம்மாந்துறை போல நாவிதன்வெளி இறக்காமம் ஆகியகோட்டங்களும் இவ்வாறான கட்டிடங்கள் புதுப் பொலிவு பெற வேண்டும் என்று வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கேட்டுக்கொண்டார்.

 இதற்காக ஒத்துளைத்த மாகாண வலய கல்வித்திணைக்களம்  அனைவருக்கும் கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.நசீர்  நன்றிகளை தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours