அம்பாறை மாவட்ட செயலக கணக்காளராக ஐ எம் பாரிஸ் கடமையேற்றுள்ளார்
அம்பாறை மாவட்ட அம்பாறை மாவட்டச் செயலாளர் மேற்கொள்ளப்பட்ட உள்ளக இடமாற்றத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது
நிந்தவூரை பிறப்பிடமாகவும் சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட இலங்கை கணக்காளர் சேவை தரம் 1 ச் சேர்ந்த ஐ எம் பாரீஸ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் புதிய கணக்காளராக பதவி ஏற்றுள்ளார்
இந்த நிகழ்வில் சமாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ எம் ஆதம்பாவா, சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எஸ் எல் சர்தார் மிர்சா, சம்மாந்துறை பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ கே றினோசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்
கணக்காளர் சேவையில் மிகுந்த அனுபவமும் திறமையும் கொண்டவரான ஐ எம் பாரிஸ் வீதி அபிவிருத்தி திணைக்களம், அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, சம்மாந்துறை பிரதேச செயலகம் ஆகியனவற்றில் கணக்காளராக கடமையாற்றி பலரது நன்மதிப்பையும் பெற்றவர் அவர்.
Post A Comment:
0 comments so far,add yours