( வி.ரி.சகாதேவராஜா )

 ஒரு பிரதேசத்தில் உள்ள பிரதேச போலீஸ் ஆலோசனை குழு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.  அதன் அதிகாரம் பரந்துபட்டது.

 இவ்வாறு உதவிப்போலீஸ் அத்தியட்சகர் சனத் பண்டார காரைதீவு  பிரதேச போலீஸ் ஆலோசனை குழுவை சந்தித்துப்  பேசிய பொழுது குறிப்பிட்டார்.

காரைதீவுப் பிரதேச போலீஸ் ஆலோசனை குழுக் கூட்டம் நிலையப் பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் தலைமையில் நேற்று முன்தினம்(23) சனிக்கிழமை மாலை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது .

அங்கு அக்கரைப்பற்று இறக்காமம் நிந்தவூர் காரைதீவு ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சனத் பண்டார பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆலோசனை குழுவினருடன் கலந்துரையாடினார்.

காரைதீவு பிரதேச போலீஸ் ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கும் பி.ரி. தர்மலிங்கம், வி.ரி.சகாதேவராஜா, எஸ். ரவீந்திரன், மௌலவி ரியால் , நியாஸ் , 
நலீம் , முனாப் மௌலவி பாரீஸ், மௌலவி நளீம் ஜீவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அங்கு அவர் மேலும் பேசுகையில்..

 நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். திருக்கோயிலிலே போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது அங்கு ஒரு தடவை பதவி நீக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுள் அங்குள்ள பிரதேச பொலீஸ் ஆலோசனைக் குழுவினர் போலீஸ் மா அதிபரைச் சந்தித்து என்னை அந்த பதவிக்கு மீண்டும் அமர்த்தினார்கள் .அதன் பின்பு எனக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  பதவி உயர்வும் கிடைக்கப்பெற்றது. அந்த அளவுக்கு பிரதேச போலீஸ் ஆலோசனை குழுவிற்கு மிகவும் கூடுதல் அதிகாரம் இருக்கிறது . சக்திவாய்ந்த அமைப்பு அது.

திருக்கோவில் பிரதேசத்தில் 99 வீதம் போதைப்பொருள் பாவனையை அதிரடி படையினருடன்சேர்ந்து தடுத்திருந்தேன். அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஜெகராஜன் மற்றும் பலர் எனக்கு உதவினார்கள் .
இன்றும் திருக்கோவில் மக்கள் என்னை பற்றி பேசுவார்கள் .அதை போன்று காரைதீவு மக்கள் இங்கு உள்ள பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெகத்தை சொல்ல வேண்டும்.
போலீஸ் ஆலோசனை குழுவினருக்கு சமுதாயத்தில் மிகுந்த மதிப்பு இருக்கின்றது. அவர்களுக்கு அதிகாரம்  கூட .
போலீசில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றால் அதனை தட்டி கேட்பதற்கு உரிமை இருக்கின்றது. முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
உங்களது ஒத்துழைப்பு இந்த பிரதேச மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் அவசியம் .உங்களது சேவையை மதிக்கிறேன். என்றார்.

 இறுதியில் ஆலோசனை குழுவினரின் கருத்துக்களும் பெறப்பட்டன.

இங்கினியாகலகுளம் உடைந்து நள்ளிரவில் பெரு வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்த பொழுது காரைதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெகத் தலைமையிலான குழுவினர் அந்த நடுநிசியில் குறித்தபிரதேசத்திற்கு சென்று மக்கள் பாதுகாப்பில் ஈடுபட்டார். மற்றும் காரைதீவு பாதுகாப்பு தொடர்பாக இரவு பகலாக சேவையாற்றி வருவதாக குழுவினர் திருப்தியும் நன்றியும் தெரிவித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours