மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக்கிராம மக்கள் இதுவரை காலமும் தமக்குரிய சுத்தமான குடிநீரின்றி மிகவும் இன்னறுற்றவிலையிலேயே  தமது வாழ்வைக் கழித்து வந்தனர். இதனால் அக்கிராமத்தில் பலர் நோய்களுக்கும் உட்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்


இவ்விடையம் குறித்து அக்கிராம மக்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மக்களின் கோரிக்கைய ஏற்று துரிதமாகச் செயற்பட்ட பாராளுடன்ற உறுப்பினர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடரப்பு கொண்டு வேத்துச்சேனைக் கிராம மக்களுக்குரிய குழாய்மூலமான சுத்தமான குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கிணங்க இன்றயத்தினம் அக்கிராமத்திற்கு குடிநீர் வழங்குவதற்குரிய ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களை உத்தியோக பூர்பூவமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலனாதன் மதிமேனன்,  இலங்கை தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிர்மான  பொறியியல் உதவியாளர் இளையதம்பி பிரதீபன் இலங்கை தமிழரசுக்கட்சி போரதீவுப்பற்று வட்டாரக்கிளை உபதலைவர்; மகேஸ்வரன் கோபிநாத், பாலையடிவட்டை இணைப்பாளர் தங்கராசா ஜெயசீலன், போரதீவு வட்டார இணைப்பாளர் பெரியதம்பி பிரதீப்குமார்  உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதுவரைகாலமும் தாம் சுத்தமாக குடிநீரின்றி வாழ்ந்து வந்ததாகவும், தமது கோரிக்கையை ஏற்று தமக்குரிய குடிநீர் இணைப்புக்களை எற்படுத்தித் தந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மற்றும் இலங்கை தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினருக்கும் அப்பகுதி மக்கள் தமது நன்றியை இதன்போது தெரிவித்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours