(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பில்
இளைஞர் யுவதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும்
கருத்தரங்கு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனம், வாழ்வுரிமை மனித
உரிமைகள் மையம் மற்றும் மனித உரிமைகள் முதலுதவி மையங்கள் ஆகியன இணைத்து
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனத்தின் பணிப்பாளர் வி.ரமேஸ் ஆனந்தன்
அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்
நிகழ்வின் வளவாளராக ரைட் ரூ லைஃப் (Right to Life) நிறுவனத்தின் இயக்குனர்
சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துலான் தசநாயக்க கலந்து கொண்டதுடன்,
மனித உரிமைகள் மீறல் மற்றும் அரசியல் அமைப்பில் உள்ள .மனித உரிமைகள்
தொடர்பான சரத்துத்துக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக
தெளிவூட்டியிருந்தார்.
மேலும் இளைஞர் யுவதிகளின் உரிமைகள் மிறப்படும் போது மேற்கொள் வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours