( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த
மகா சங்காபிஷேக நிகழ்வு நேற்று ( 16) சனிக்கிழமை வெகு சிறப்பாக
நடைபெற்றது.
108
சங்காபிஷேக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்
ஆலயகுரு சிவசிறி ஹோவர்த்தன சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள்
முன்னிலையில் காலை 9.00 மணி முதல் சங்காபிஷேக கிரியைகள் நடைபெற்றன.
முன்னதாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் கலாநிதி கி.ஜெயசிறில் முன்னிலையில் சிவலிங்க அபிஷேகம் இடம்பெற்றது.
இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ,
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்,
ஜனாதிபதி செயலணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் ,
வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம்,
ஆலய பரிபாலன சபை ஆலோசகர் உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ஆயிரம் அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours