( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு
மாவட்டத்தின் தாந்தாமலை விவசாய போதனாசிரியர் பிரிவில் விவசாயிகளுக்கான
ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
தாந்தாமலை
விவசாய போதனாசிரியர் வி.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், தெற்கு வலய
உதவி விவசாய பணிப்பாளர் திருமதி நித்தியா நவரூபன், பாடவிதான
உத்தியோகத்தர்களான லக்ஸ்மன் மற்றும் மாறன் ஆகியோருடன் தெற்கு வலய விவசாய
போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரதேச விவசாயிகள் எனப்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது
நவீன தொழில்நுட்பங்களுடன் மேட்டுப்பயிர்ச் செய்கையை மேற்கொள்வது,
மாமரங்களை கத்தரித்து பழக்கப்படுத்துதல், முறையான பசளையிடல், வாழைச்
செய்கையில் ஏற்படடும் நோய் பீடைகளை ஒருங்கிணைந்த முறையில்
கட்டுப்படுத்துதல் வாழைக் குட்டி பராமரிப்பு என்பன பற்றிய விளக்கங்கள்
செய்துகாட்டல்கள் மூலமாக விவசாய போதனாசிரியர்களால் தெளிவுபடுத்தப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours