கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களிடையே நடாத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான செயற்றிறன் மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபையானது கூடிய புள்ளிகள் பெற்று தேசிய மட்ட மதிப்பீட்டிற்கு தகுதி பெற்றுள்ளது.
பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் என்பனவற்றின் கண்காணிப்பில் சுயாதீனமான நடுவர்கள் மூலம் மாகாண மட்டத்திலான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கல்முனை மாநகர சபையானது கடந்த வருட ஆரம்பம் முதல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் தொடர்ந்தேச்சியாக செயற்படுத்தி வந்த நிர்வாக சீர்படுத்தல்கள், சீரான ஆளணி முகாமைத்துவம், திட்டமிட்ட அடிப்படையிலான உட்கட்டமைப்பு விருத்திகள், நவீனமயப்படுத்தப்பட்ட முகப்பு அலுவலக வசதிகள் என்பவற்றோடு மாநகர சபையின் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர் குழாத்தின் அயராத முயற்சிகளின் பயனாக செயற்றிறன் மதிப்பீட்டில் பாரிய வளர்ச்சி வீதத்தினை வெளிப்படுத்தியிருந்தமையின் அடிப்படையிலேயே இம்மதிப்பீட்டில் கல்முனை மாநகர சபை முன்னிலைக்கு வந்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours