பள்ளிவாசல்களில் கடமையாற்றும் மௌலவிமார்கள், கதீப்மார்கள், மு.அத்தின்மார்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குமாறு அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் / நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வக்ப் சபையின் WB/9689/2024 எனும் தீர்மானத்தின் பிரகாரம் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கண்ணியமிக்க மௌலவிமார்கள், கதீப்மார்கள், முஅத்தின்மார்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கு புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசலில் சிறந்த முறையில் மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்காகவும் அவர்களது பல்வேறு தேவைகளை கிரமமாக நிவர்த்தி செய்வற்காகவும் ஏற்கனவே பள்ளிவாசலினால் வழங்கப்படுகின்ற சம்பளத்திற்கு மேலதிகமாக போதுமான விசேட கொடுப்பனவை ரமழான் மாதத்தில் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வகுப் சபை செயலாளர் உட்பட முஸ்லிம் திணைக்களத்தின் சகல கள உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours