இன்றைய தினம் நான் கோப் - COPE Committee on Public Enterprises. குழுவில் இருந்து ராஜினாமா செய்தேன், ஏனெனில் அது பொது நிறுவனங்களுக்கான குழு அல்ல, தனிப்பட்டவரின் குழுவாக செயல்படுகின்றது. தயாசிறி, ஹேஷா மற்றும் நளின் பண்டார எம்.பி.க்களுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன் மூலம் இதுவரை நாடாளுமன்றக் குழுவில் இருந்து விலகிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. “பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிதிப் பங்குகளைக் கொண்ட ஏனைய அரை-அரசு அமைப்புகளில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக கோப் நிறுவப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினரை தலைவராக நியமிப்பதன் மூலம், அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்ற குழு தவறிவிட்டது.
Post A Comment:
0 comments so far,add yours