சித்திரைக் குதுகலம் 2024 இல் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி கரப்பந்தாட்ட சுற்று போட்டி கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி கபடி சுற்று போட்டி போன்ற குழு விளையாட்டுகளும் இடம்பெற உள்ளது.
இறுதி நிகழ்வுகளாக 20.04. 2024 அன்று எருவில் கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் களியாட்ட கலாச்சார விளையாட்டு விழாவும் 27.04. 2024 ஆம் திகதி கலை விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் கண்ணகியம்மன் ஆலய பூம்புகார் அரங்கில் இடம்பெற இருக்கின்றது.
இந்த நிகழ்வுகளோடு இணைந்து கொள்ளுமாறு YUKயினர் அன்பாக அழைத்து நிற்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் இன்றைய தினம் உள்ளூர் வெளியூர் அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது எருவில் கண்ணகி அம்பாள் ஆலய முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்வுகளுக்கு கழகங்களின் தலைவராகிய இளைஞரணி தலைவர் ஹரிசனன் உதய நிலா கலைக் கழகத் தலைவர் துசியந்தன் கண்ணகி விளையாட்டுக் கழக தலைவர் யுவராஜ் ஆகியோர் தலைமை தாங்க சிறப்பாக இடம் பெற்றுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours