பாறுக் ஷிஹான்
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஞாயிற்றுக்கிழமை(31) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது வணக்கத்திற்குரிய போதகர் கிருபைராஜா தலைமையில் மாலை இடம்பெற்றதுடன் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours