நேற்றைய முன்தினம் 01.04.2024 இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினரான மதுரவிதானகே என்பவரால் கொண்டுவரப்பட்ட ஒத்தி வைக்கும் பிரேரணையானது சுயாதீன ஆணைக் குழுக்களின் செயல்பாடுகள் ஆனது மக்களது தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை என்பதாகும் விசேடமாக பொது நிர்வாக ஆணைக்குழுக்கள் .

சுயாதீனமான ஆணை குழுக்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு தடையாக காணப்படுவது இவ் இலங்கை அரசாங்கம் தான். 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக சுயாதீனமான ஆணைக்குழுக்கள் பலப்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் கோட்டபாய ராஜபக்சே மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சுயாதீன இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது அதன் பின் பதவிக்கு வந்த ராஜபக்ச கூட்டம் 20 ஆம் சீர்திருத்த சட்டத்தை உருவாக்கி இவ் ஆணைக் குழுக்களை பலவீனமாக்கினார் அதிலும் தாங்கள் இவ்வாறான ஊழ;ஊழல்களில் இருந்து தப்புவதற்க்குரிய ஏற்பாடுகளை செய்தார்கள்.

இவ் பிரேரணையை கொண்டு வந்த இவ் பாராளுமன்ற உறுப்பினர் கூட அன்றைய தினம் இருபதாவது சட்ட சீர் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இவ்வாறான விடையங்கள் காரணமாக இதுவரையில் அரசியலமைப்பு சபைக்கு ஓர் தமிழ் பிரதிநிதியையும் நியமிக்காது. சபாநாயகர் காலத்தை இளுத்தடித்துக்கொண்டு செல்கின்றார். அதேபோல் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி தேர்தலுக்கான நிதியை கையாளும் அதிகாராம் சுயாதீன ஆணைக் குழுவுக்கு வழங்கப்படவில்லை. இவ் ஆணைக் குழுவுக்கு நிதி அதிகாரம் வழங்கி இருந்திருந்தால் தேர்தல் ஆணைக்குழுவானது இவ் தேர்தலை மிக இலகுவாக நடத்தி இருக்கலாம். சுயாதீன ஆணைக் குழுவினை சுயாதீனமாக ஜனாதிபதி இயங்க விடாததினால் தேர்தல் காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள் குறிப்பாக உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அரசு உத்தியோகத்திற்கு சம்பளம் கிடைக்கப்பெறாமல் இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆசிரியர்கள் இன்று வரையிலும் அவ் காலத்துக்குரிய சம்பளம் இல்லாமல் உள்ளார்கள் பதவி விலகிய அதிபர்கள் திரும்பவும் வேலையில் இணைய முடியாமல் உள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆசிரியருக்கு ரூபாய் 360,000 வரையில் இன்னும் அவர்களுக்கான பணம் வைப்பிலிடப்படாமல் உள்ளது. இவ் உரையின் போது கல்வி அமைச்சரும் சபையில் இருந்தார் அவரிடம் நான் எனது கோரிக்கையாக இவ் பிரச்சனைக்குரிய தீர்வினை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆலோசனை நடாத்தி பெற்றுத்தருமாறு கேட்டுக் கொண்டேன்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours