(அஸ்லம் எஸ்.மெளலானா)
ரமழான் நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டிகை மகிழ்ச்சி விழா நேற்று புதன்கிழமை (24) மாநகர கேட்போர் கூடத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.பல்லின சமய ஆராதனைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், . பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் ஆகியோர் உரையாற்றியதுடன் நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான என். பரமேஸ்வர வர்மன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதன்போது பொறியியல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நௌஷாத் உள்ளிட்டோரின் பாடல் மற்றும் கலாசார, விநோத நிகழ்ச்சிகள் சபையோரின் வரவேற்பைப் பெற்றிருந்தன.
பண்டிகை மகிழ்ச்சி விழாவின் ஓர் அங்கமாக பகல் போசன விருந்துபசாரமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உள்ளூராட்சி உதவியாளர் சி. சர்ஜுன் தாரிக் அலி, வேலைகள் அத்தியட்சகர் எம்.ரி.எம். நஹீம், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.பாஸித், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.எம்.எம். பயாஸ் தலைமையிலான குழு இப்பண்டிகை விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours