(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரியில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த முருகேந்திரன் குருசாட் ரஷ்யாவின் நோவோசோபிறிக்ஸ் நகரில் இடம்பெற்ற காட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிக்காட்டி இலங்கை திரு நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் நடைபெற்ற Moscow karate universe போட்டியிலும் இம் மாணவன் தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் கராத்தே போதனாசிரியர்களான Eng.எஸ். முருகேந்திரன் , இராஜலட்சுமி தம்பதிகளின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours