இலங்கைக்கு
வெளியே முதல் தடவையாக உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர்
சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு அவுஸ்திரேலியா மண்ணில் சிட்னி மாநகரில்
துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(29) திறந்து
வைக்கப்பட்டது.
அந்த சிலையை நிறுவியவர் காரைதீவைச்சேர்ந்த சீமான் நாகமணி குணரட்ணம் அவர்கள்.
சிட்னி
உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின் ஸ்தாபகரும், அவுஸ்திரேலியா காரைதீவு
மக்கள் ஒன்றியத்தின்(AusKar) கௌரவ போஷகரும், சமூக செயற்பாட்டாளருமான திரு.
நாகமணி குணரெட்ணம் அவர்களுடைய முழு முயற்சியின் பேரில் சுவாமி விபுலானந்த
அடிகளார் திருவுருவச் சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளது.
இதனை
சுபநேரத்தில் சிலைநிறுவுனர் திரு திருமதி குணரெத்தினம் மனோன்மணி
தம்பதியினர் மங்கலபேரிகைகள் முழங்க, திரைநீக்கம் செய்து மாலை சூட்டி
நெற்றித்திலகமிட்டு திறந்து வைத்தனர்.
திரைநீக்க
நிகழ்வில், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள்,
தமிழ் அறிஞர்கள், கல்வியலாளர் பெருமக்களின் பங்கேற்போடும் அவை நிறைந்த
மக்கள் கூட்டத்தோடு வெகு சிறப்பாக இடம்பெற்றமை தெரிந்ததே.
நிற்க...
அவரிடம் சிட்னிக்கு சிலை வந்த கதையை கேட்டபோது அவர் இவ்வாறு கூறுகிறார்:
ஏழைகளின்
தோழனாக அன்று காமராசர் விளங்கினார். காமராசருக்கு சிலை எடுக்கப்பட்ட
பொழுது என்னுள்ள ஒரு சிந்தனை எழுந்தது அதேபோன்று பல சேவைகளை சாதனைகளை செய்த
எமது ஊர் பிறந்த முத்தமிழ் வித்தகனுக்கு ஒரு சிலை எடுக்கக் கூடாதா? என்ற
சிந்தனை பிறந்தது.
எதிர்காலத்தில் புலம்பெயர்
நாடுகளில் வாழும் சந்ததியினர் சுவாமி விபுலானந்த அடிகளாரை யார் என்று
கேட்டு விடக்கூடாது என்று நோக்கில் சிலைநிறுவும் பணியை மேற்கொண்டேன்.
அதன்
பலனாக 2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சென்று புதுக்கோட்டை மற்றும்
திருப்பூரிலே சிலை செய்து எடுப்பதற்காக சென்றேன் .அங்கு கற் சிலையை
காட்டினார்கள். என்னைப் பொறுத்தவரையிலே வெண்கலச் சிலை எடுக்க வேண்டும் என்ற
ஆசை இருந்தது .அதற்காக ஆரம்பத்திலேயே 3200 டாலரை அட்வான்ஸ் ஆக
கொடுத்துவிட்டு திரும்பி இருந்தேன். போக்குவரத்துக்காகவும்
துறைமுகச்செலவுக்காகவும் 1000 டொலரை வழங்கி விட்டு வந்தேன்.
சிலை
வரவில்லை. ஒன்றரைமாத காலமாக அந்த சிலை வரவில்லை .பின்பு விசாரித்த பொழுது
அங்கு துறைமுகத்தில் அது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றது .
ஏனென்றால்
சிலைகள் கடத்தப்படுகின்ற காலம் அது .இந்த சிலை எந்த நோக்கத்தில்
இருக்கின்றதோ தெரியாது என்பதனால் அதை தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்ற
செய்தி கிடைத்தது.
உடனே நான் மீண்டும் அங்கு சென்று
அங்கு உள்ளவர்களை சந்தித்து சுங்கப் பகுதியினடம் இதற்கான அனுமதியை பெற்று
அதனை அவுஸ்திரேலியா கொண்டு வந்து சேர்த்தேன்.
அந்த
சிலையின் எடை 58 கிலோகிராம் .அங்கு செய்ததற்கு 32,000 டொலர் பிடித்தது.
ஆனால் இதே சிலையை அவுஸ்திரேலியாவில் செய்வதானால் 27000 டொலர் பிடித்து
இருக்கும் .அதாவது கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் பிடித்திருக்கும்.
ஆக 2020ல் சிட்னிக்கு அந்த சிலை வந்து சேர்ந்தது .
அதனை நிறுவுவதற்கு நான் பொதுவிலேயே பகிரங்கமாக அறிவித்தேன்.
சிலை
திறப்பு விழா நடைபெற இருக்கின்றது. கடல் கடந்த நாடுகளில் இருப்பவர்கள்
விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று. அந்த வகையில் தான் முதன்முதலில்
காரரைதீவைச் சேர்ந்த தம்பி சகாதேவராஜா மற்றும் மகேந்திரன் ஆகியோர்
என்னிடம் பேசினார்கள் . நல்ல பணி என்று
வாழ்த்து தெரிவித்தார்கள்.
அன்றிலிருந்து
தொடங்கிய ஒரு இலட்சிய கனவுதான் கடந்த வெள்ளிக்கிழமை நனவாகி இருந்தது.
இங்கே கிட்டத்தட்ட இந்த சிலை அமைப்புக்கு இந்த விழாவுக்கும் சேர்த்து
52,000 டாலர் செலவாகி இருந்தது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவாகியது.
இதேவேளை சிட்னி முருகன் ஆலயத்திற்கு
3000
டொலர் பெறுமதியான பின்னால் இயங்கும் மேளதாளமணியை வாங்கி வழங்கினேன். அங்கு
அவர்கள் அந்த சத்தத்தை ஏனையவர்கள் கேட்பதில் உள்ள சட்டப் பிரச்சனைகள்
தொடர்பாக கூறினார்கள் .அதனை அடுத்து அதனை நான் காரைதீவு கந்தசுவாமி
ஆலயத்திற்கு வழங்கியிருந்தேன்.
சுவாமி விபுலானந்தரின் சிலைக்கான பீடம் அமைப்பதற்கு 1400 டொலர் செலவில் அமைத்திருந்தேன்.
மொத்தத்திலே தனியாளாக நின்று சிட்னியில் சிலை திறப்பு விழாவை நடாத்தி சிறப்பு மலரை வெளியிட்டேன்.
கடல்
கடந்த நாடுகளிலே முதலாவதாக இதனை இங்கு நிறுவியமை எனக்கு சந்தோசமாக
இருக்கின்றது பெருமையாகவும் இருக்கின்றது. இதைத் தொடர்ந்து கனடாவிலும்
மலேசியாவிலும் சுவாமியின் சிலை நிறுவுவதற்கு அங்கிருந்து வந்தவர்கள் எனக்கு
ஒப்புதல் தந்திருக்கின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் அதனை
செய்வதற்கு நன்றிகள்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
Post A Comment:
0 comments so far,add yours