அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வடக்கின் யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து அன்னையின் உருவப்படம் தாங்கி 13ஆம் திகதி புறப்பட்ட ஊர்தி (18) மட்டக்களப்பை வந்தடைந்தது.
அதனையடுத்து 36வது ஆண்டு நினைவு நாளை நடைபெறவுள்ள நிலையில் அன்னை உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடத்தில் உருவப்படத்துக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் ஊரதியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு ஊர்தி மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்கும் பவனி புறப்பட்டது்.
36வது ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பூபதி அம்மாவின் மகள், உறவினர் களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவு தினததினை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் ஒவ்வொரு நாளும் அங்சலி நகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாளான (19) மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அன்னை பூபதியின் சமாதியில் சிறப்பான முறையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார்.
இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours