சம்மாந்துறை
கல்வி வலயத்திலிருந்து இம்முறை தேசிய மட்ட ஒலிம்பியாட் (கணிதம் )
போட்டிக்கு இரு மாணவிகள் தெரிவாகியுள்ளதாக கணித பாட உதவிக் கல்விப்
பணிப்பாளர் எம் எம் எம். ஜௌபர் தெரிவித்தார்.
மல்வத்தை
விபுலானந்தா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சிவரூபன் ஜினோதிகா மற்றும்
ரி.மதுஸ்கா ஆகிய மாணவிகள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலையின் அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் பாடசாலை காலை ஒன்றுகூடலில் சாதனை மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கில்
மல்வத்தை திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்த செல்வி சிவரூபன் ஜினோதிகா என்ற
மாணவி கணிதம் மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் தொடர்ச்சியாக சாதனை
படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours