சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா எழுதிய அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம் எனும் நூல்வெளியீட்டு விழா சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மண்டபத்தில் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்குப்
பிரதம அதிதியாக சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின்பொருளாளர்
தொழிலதிபர் சமூகசேவகர் க.துரைநாயகம் அவர்களும் சிறப்பதிதிகளாக தினகரன்
நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியர் மூத்த ஊடகவியலாளர் க.குணராசா உவெஸ்லி
உயர்தரப்பாடசாலையின் முதல்வர் செ.கலையரசன் மூத்த ஊடகவியலாளர்
ஏ.எல்எம்.சலீம், ஓய்வுபெற்றகோட்டக்கல்விப்பணிப் பாளர் கவிஞர் ப.மதிபாலசிங்கம் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில்
முதல்பிரதியினை சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின்பொருளாளர்
தொழிலதிபர் சமூகசேவகர் க.துரைநாயகம் இரண்டாம்பிரதியினை சுவிஸ் உதயம்
அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் பெற இருக்கின்றார்கள்
இந் நூலின் நயவுரையினை ஜெஸ்மி எம் மூசாவும் ஏற்புரையினை சிரேஷ்ட
ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசாவும் நிகழ்த்தவுள்ளனர்
Post A Comment:
0 comments so far,add yours