இ.சுதாகரன்
உதயபுரம்
தமிழ் வித்தியாலயத்தில் ஐ எம் எச் ஒ நிறுவனத்தின் நிதி உதவியுடன்
புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கணனி அறை திறந்து வைப்பு
பட்டிருப்பு
கல்வி வயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில்
சர்வதேச சுகாதார மருத்துவ அமைப்பின் பல மில்லியன் ரூபாய் செலவில்
புனரமைக்கப்பட்ட வகுப்பறைகளின் கூரைகள், கணனி கூடம் ,நீர் இணைப்பு மற்றும்
சுற்று மதில் திறப்பு விழா நிகழ்வு கடந்த புதன்கிழமை வித்தியாலய முதல்வர்
திரு கோகுலராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில்
சர்வதேச சுகாதார மருத்துவ அமையத்தின் பணிப்பாளர் திருமதி ராஜம் அம்மணி
அவர்களும் ,IMHO நிறுவனத்தின் இணைப்பாளர் இராதாகிருஷ்ணன் நிறுவனத்தின்
இலங்கைக்கான இணைப்பாளர் பிரதீப்காந், பொறியியலாளர் ஹென்றி உட்பட
பாடசாலையின் பிரதி முதல்வர் ஜெ.மேவின் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்
சங்கத்தின் செயலாளர், பெற்றோர் ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப்பலரும் கலந்து
கொண்டனர்.
இதன் போது
மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதிதிகளின் கரங்களினால் கணனி
ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours