(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பட்டத் திருவிழா சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் முதல் தடவையாக இந்தப் பட்டத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பற்றினர்
இதில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த . ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்
இதில் முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு
உமாபத சர்மா , கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர்
வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த பட்டத் திருவிழாவில் பெருமளவிலான பொது மக்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பட்டத் திருவிழாவை கண்டு கழித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours