( வி.ரி.சகாதேவராஜா)
அபுதாபியில்
உள்ள பிரம்மாண்டமான இந்து ஆலயத்தில் ஐக்கிய அரபு ராஜ்யத்தின் மன்னர்கள்
அமைச்சர்கள் முன்னிலையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சிறப்பாக இடம்
பெற்றது.
இது மத நல்லிணக்கத்தின் உச்சம் என்று கருதப்படுகிறது.
"
இஸ்லாமியர்கள் தந்த இந்து ஆலயம்" என்று போற்றப்படுகின்ற அபுதாபி Baps
ஹிந்து மந்திர் நாராயணன் ஆலயத்தில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம்
கோலாகலமாக இடம்பெற்றது.
உலகின்
தனி முஸ்லிம் நாடான அபுதாபியில் முதலாவது பிரமாண்டமான இந்து ஆலயம் 700
கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இந்திய பிரதமர் மோடியினால் திறந்து
வைக்கப்பட்ட பின் இடம் பெறும் முதலாவது இப்தார் நிகழ்வு இதுவாகும்.
நிகழ்வுக்கு அபுதாபி துபாய் ஆகியவற்றின் ஷேக் (மன்னர்கள்) மற்றும் அமைச்சர்கள் வருகை தந்திருந்தார்கள்.
மன்னர்
ஷேக் நகயன் முபாரக் அலி உரையாற்றியபோது.. உலக சமாதானம் மத நல்லிணக்கம்
பற்றி குறிப்பிட்டு இது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது என்று சொன்னார்.
பெப்ஸ் ஹிந்து மந்தீர் ஆலயத்தின் பிரதம குரு பேசுகையில்..
மத
நல்லிணக்கம் சகிப்புத்தன்மை பொறுமை சமாதானம் போன்றவற்றிற்கு இலக்கணமாக
இந்த பிராந்தியம் திகழ்கின்றது. இங்கு வருகை தந்த ஷேக் மற்றும் அமைச்சர்களை
உளமார வரவேற்கிறோம் என்று சொன்னார்.
துபாயிலிருந்து அங்கு சென்ற சுந்தரலிங்கம் நகுலன்( நற்பிட்டிமுனை )தலைமையிலான இலங்கை இந்துக்களும்
இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
துபாயில் உயர்பதவி வகிக்கும் திரு சுந்தரலிங்கம் நகுலன் கூறுகையில்..
ஐக்கிய
அரபு ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமிய மன்னர்கள் அமைச்சர்கள் இந்த
ஏழு நாடுகளிலும் வசிக்கின்ற மக்களிடையே எந்த இன மத நிற சாதி பேதத்தை
சிறிதளவு காட்டாது மிகவும் கண்ணியமாக மதிப்புடன் நடத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் தனி முஸ்லீம் நாடான அபுதாபியில் பிரமாண்டமான ஆலயம்
அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வாழுகின்ற துபாயில் மூன்று ஆலயங்கள்
இருக்கின்றன. அனைத்தையும் இஸ்லாமிய சகோதரர்களின் பெரும்பங்குடன் தான் அதை
அமைத்திருந்தார்கள். உலகிலே
இன நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக விளங்குவது ஜக்கிய அரபு ராஜ்யம் ஆகும்.
இங்கு
நிலவுகின்ற மத நல்லிணக்கம் இனசௌயன்யம் உலகெங்கும் நிலவினால் உலகில்
சமாதானம் சுபீட்சம் தானாக நிலவும் என்பது எனது நம்பிக்கை என்று சொன்னார்.
இந்த
ஆலயம் அமைப்பதற்கான 27 ஏக்கர் காணியை இலவசமாக ஐக்கிய அரபு ராஜ்யத்தின்
முடிக்குரிய இளவரசர் அரசர் சேக் முகமது பின் சயீட் நகயன் அவர்களால் பல கோடி
ரூபாய் பெறுமதியான 27 ஏக்கர் காணி வழங்கப்பட்டது.
தெரிந்ததே.
Post A Comment:
0 comments so far,add yours