வியாழேந்திரன் எம்.பி ஏமாற்று வித்தைக்காரன்.எனது வாழ்நாளில் மற்றும் அனுபவத்தில் கண்ட மிகப்பெரிய ஏமாற்று வித்தைக்காரன் இந்த வியாழேந்திரன் எம்.பி தான்.இவரை விட நான் சகல விடயத்திலும் தகுதி உடையவன்.அவரை பற்றிய கேள்வி எதனையும் என்னிடம் கேட்க வேண்டாம் என 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்ட மேற்கொண்ட கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக இன்று(7) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பாண்டிரப்பு பகுதியில் இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
வியாழேந்திரன் எம்.பி ஏமாற்றுவதில் பெரும் திறமைசாலி.கடந்த காலங்களில் நான் கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் உண்ணாவிரதம் இருந்த போது அவர் எதிர்கட்சியில் இருந்தார்.இதன் போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல்வேறு புள்ளிவிபரங்களை அவ்வப்போது தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழர்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இவ்விடயத்தில் செயற்பட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.தீர்வு இவ்விடயத்தில் கிடைக்காவிடில் கிழக்கு மாகாணத்தை முடக்குவோம் அடிப்போம் என்றெல்லாம் கூறி இருந்தார்.
ஒன்றும் நடந்த பாடில்லை.வியாழேந்திரன் எம்.பிக்காக 2020ஆண்டு தேர்தலில் வெற்றிக்காக பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.அவ்வாறு அவர் வெற்றி பெற்றதும் முதலில் என்னை தான் முதலில் காய் வெட்டினார்.இன்று அவர் அமைச்சராகி 4 வருடங்களுக்கு மேலாக செல்கின்றது.மட்டக்களப்பில் இருந்து கல்முனை பிரதேசமானது 40 கிலோ மீற்றர் தூரம் தான்.இந்த 40 கிலோ மீற்றரில் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு இன்று அவருக்கு டீசல் இல்லை போலும்.இன்று வரைக்கும் அவர் கல்முனை தமிழர்களை வந்து சந்திக்கவே இல்லை.இதன் மூலம் இவ்வாறானவர்கள் சொல் அளவில் தான் செயற்படுகின்றனர்.ஒரு போதும் செயல் அளவில் செயல்படுவதாக தெரியவில்லை.மயிலந்தனை மடு பண்ணையாளர்களின் பிரச்சினை மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காவிடின் இவர் தனது பாராளுமன்ற பதவியை விட்டு விலக சொல்லவில்லை மாறாக தனது அமைச்சு பதவியையாவது இராஜனாமா செய்ய முடியுமா என்று கேட்க விரும்புகின்றேன்.
சொல்லு பல்லக்கு தம்பி கால்நடை.சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று.எனது வாழ்நாளில் மற்றும் அனுபவத்தில் கண்ட மிகப்பெரிய ஏமாற்று வித்தைக்காரன் இந்த வியாழேந்திரன் எம்.பி தான்.இவரை விட நான் சகல விடயத்திலும் தகுதி உடையவன்.அவரை பற்றிய கேள்வி எதனையும் என்னிடம் கேட்க வேண்டாம்.என கேட்டுக்கொள்கின்றேன்.இவர் ஒரு சந்தரப்பத்தில் வேப்பவட்டுவான் பகுதியில் பாணை பச்ச தண்ணீரில் தொட்டு தின்றதாக குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறெல் லாம் கூறி ஏமாற்றுவது இவரது வேலையாகும் என குறிப்பிட்டார்
Post A Comment:
0 comments so far,add yours